மென்பொருள் துறையில் பொதுவாக எல்லா நிறுவனங்களிலும் பணியில் சேருவதற்கு முன்னால் அல்லது சேர்ந்த சில தினங்களிலோ மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.அதற்கான செலவை அந்த நிறுவனமே ஏற்றுகொள்ளும். நிறுவனத்துக்கும் மருத்துவமனைக்கும் ஒரு மாதிரி புரிந்துணர்வு(!!!!!!!!!!!!!!) இருக்கும். அப்படி ஒரு மருத்துவமனையில் என்னை சோதனைக்கு உட்படுத்த(Master checkup) சென்ற வாரம் பெங்களுரு சென்றிருந்தபோது ஒரு மிகப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பெரிய நிறுவனத்தின் ஊழியர்கள் யா……….ஹு…….என்று சத்தமிட்டபடி மருத்துவமனையில் நுழைந்தார்கள். வந்தவர்களில் முண்டா பனியன் முக்கா பேண்ட் அணிந்த பெண்களும் கிழிந்த கழுவாத ஜீனும் இருக்கி பிடிக்கும் பனியனும் அணிந்த ஆண்களும். மருத்துவ வரலாறு சீட்டை(medical history!!!!!!!!) எழுதும்போது தண்ணி தம்மு அடிப்பீர்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான பெண்கள் ஆம் என்று எழுதியதை ஆண் நண்பர்கள் கிண்டலடித்துகொண்டிருந்தார்கள்.Beer liquor-தானா என்று அப்பாவித்தனமாக ஒரு பெண் கேட்டுகொண்டிருந்தார். அப்படியே கேமராவை இன்னொரு பக்கம் திருப்பியபோது “தண்ணி அடிக்கவே மாட்டேனு சொன்னீங்க…..ஈரல் தண்ணி அடிச்சனால பாதிக்கப்பட்டிருக்குனு டாக்டர் எப்படி சொல்றாங்க” என்று ஒரு மனைவி உலுக்கிகொண்டிருக்க கணவர் விழித்துகொண்டிருந்தார்.
இதில் விசித்திரமான ஒரு விஷயம் என்னவென்றால் மருத்துவமனைக்கு அனுப்பி வேலை செய்வோரின் நலனில் அக்கறை செலுத்தும் பெரும்பாலான நிறுவனங்களே கட்டிங் போட கல்லா திறந்திருக்கின்றன. அது தவிர அடிக்கடி நடக்கும் அலுவலக பார்ட்டிகளில் உற்சாக பானத்தை ஊற்றிகொடுக்கும் வேலையையும் இந்த நிறுவனங்கள் செய்கின்றன.பெரும்பாலான நல்ல பிள்ளைகள் கள்(ள)ளு பிள்ளைகள் ஆவது இங்குதான்.
சில மருத்துவமனைகளில் மென்பொருள் வல்லுனர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் விசித்திரமானாது.
1) கண்ணு தெரியுதா? …..ஆமா
2) காது கேக்குதா?……….ம்ம்ம்ம்ம்ம்ம்…………காதா?,,,,,,கேக்குது
3) சக்கரை இருக்கா……….எங்க?…….இல்லங்க
4) அலர்ஜி இருக்கா………இல்லீங்க(சொரிந்துகொண்டே)
இந்த ரீதியில் நீளும் கேள்விகளுக்கு ஒரு சோதனையும் செய்யப்படமாட்டாது. அது எந்த மாதிரியான புரிந்துணர்வு என்பது புரியாத புதிர்.
அன்று நான் சென்ற மருத்துவமனை ஒரு 5 நட்சத்திர மருத்துவமனை. அங்கு ஒரு சோதனையில் இருந்தும் ஒருவராலும் தப்ப முடியவில்லை.காலை பத்துமணிக்கு ஒரு குப்பியை குடுத்து போயி STOOL எடுத்துட்டு வாங்க என்றபோது “Shitttttttttttttttttttttttt” என்று கோபப்பட்டார்கள்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்………..வாயில எவ்வளவு சுலபமா வருது ஆனா……………………!!!!!!
கடைசியில் அன்று மருத்துவ பரிசோதனைகள் முடிந்து ரிப்போர்ட் வந்தபோது உன் ரிப்போர்ட் என் ரிப்போர்ட் என்ற சத்தமான பரிமாற்றங்களில் காதில் விழுந்தது
1) பெரும்பாலானவருக்கு கெட்ட கொழுப்பின் அளவு அளவை தாண்டி இருக்கிறது.
2) சிலபேருக்கு சர்க்கரை அளவு சிறிதே சராசரி அளவை தாண்டி இருப்பதற்கு அன்று காலை சாப்பிட்ட கேசரிபாத் காரணமெனன தீர்மானம் கொண்டுவரப்பட்டது
3) பெரும்பாலோர் உயரத்திருக்கும் எடைக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தனர்
4) பக்கார்டி,ஒல்ட்மாங் போன்றவர்கள் பெரும்பாலோரின் ஈரலில் கையெழுத்திட்டிருந்தனர்
5) வந்த ரிப்போர்ட்களை அவர்கள் யாரும் அவ்வளவு சீரியசாக எடுத்துகொண்டதாக தெரியவில்லை



