தடங்கள்

சொல்கிறாய் காதலை பெப்ரவரி 27, 2008

கோப்பு வகை: bashakavithaigal — bashakavithaigal @ 3:32 பிற்பகல்

கைவிரல்கள் எதேச்சையாக
கை தீண்டி
வெடுக்கென நீ மீட்டுக்கொள்ளும்போதும்
கண்களின் மோதலில்
வார்த்தைகள் சிக்கிக்கொள்ளும்போதும்
காலுடைந்து நான் கிடக்க
கண்களில் குளம் தேக்கும்போதும்
பார்க்கத்தோன்றியும் பார்க்க மறுத்து
பார்வையை இடம்மாற்றும்
உன் இரண்டு மனதவிப்பிலும்
கொட்டி விடுகிறாய்
என்னிடம் சொல்ல
மறுக்கும் உன் காதலை!

 

Leave a Reply