இன்றும் விடிந்தது
விரலெடுத்து தலைகோதி
உறக்கம் கலைக்கும்
உன் விரல்களன்றி!
தோப்பில் நகரில் இன்றும்
குயில்கள் கூவியது
அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டதை
நீயும் நானும் தவிர யாருமற்ற வீட்டில்
இரகசியாமாய் சொல்லும் உன் குரலின்றி!
வழக்கம்போல் இன்றும்
துடைக்க துண்டு மறந்து
குளியலறையில் நுழைகிறேன்
பின் தெப்பமானது
உனக்கு பிரியமான
உன் சோபா
காப்பாற்ற நீயின்றி!
நீயற்ற பொழுதுகள் இனி
திரும்ப திரும்ப நிகழும்
கடலை பிரிந்து
கரையில் மாயும் அலைபோல!

Simply Superb..
அருமையான கவிதை..