தடங்கள்

வாசிக்கப்படாத கவிதை ஜனவரி 26, 2008

கோப்பு வகை: bashakavithaigal — bashakavithaigal @ 2:38 மு.பகல்

நின்றுபோன என் நிமிடங்களில்
நீ சென்ற திசை பார்த்து
சொல்லாமல் போன என் காதலை
சொல்லத் தவிக்கிறேன்!
என்சிந்தனை செல்களில்
உன்சொற்கள் செதுக்கிய
என்சுயம்பு தன்மையை
உன்னிடம் சொல்லிவிடத்
தவிக்கிறேன்!
பூங்காவில் அமர்ந்த
புதிய காலையில்
பூக்களோடு தெரியும்
உன் புன்னகையை
உன்னிடம் சொல்லிவிடத்
தவிக்கிறேன்!
விடிகாலை வானில்
வெண்பஞ்சு மேகத்தில்
உன்முகம் பார்த்த ஒர் காட்சியை
உன்னிடம் சொல்லிவிடத்
தவிக்கிறேன்!
உன்னால்
வாசிக்கப்படாத என் கவிதையும்
நேசிக்கப்படாத என் காதலும்
கல்லறை சென்று விட்டதை
உன்னிடம் சொல்லிவிடத்
தவிக்கிறேன்!

 

4 Responses to “வாசிக்கப்படாத கவிதை”

  1. //உன்னால்
    வாசிக்கப்படாத என் கவிதையும்
    நேசிக்கப்படாத என் காதலும்//

    மிகவும் அருமை.


Leave a Reply