கருப்பு மழை பெய்யும் இருளில்
கண்ணாடி ஜன்னல் விலக்கி
கரம்,சிரம் புறம் நீட்டி
குழந்தையாய் குதூகலிப்பதில்லை!
கைபிடியழுத்தி சாய்த்துவிட சொல்லி
கைபலகை விலக்கி தோள் உரசி
வெட்கப் புன்னகையொன்றை வீசி
வெடுக்கென முகம் திருப்புவதில்லை!
கைக்குள் கைகோர்த்து
தோள்மேல் தலைசாய்த்து -பின்
தலையெழுப்பி
காதுக்குள் காதலிப்பதாய்
கிசுகிசுவென சொல்வதில்லை!
மரம்சுற்றும் மலை பாம்பாய்
கரமெடுத்து சுற்றி
‘காதலி காதலி…. ‘ என்ற
என் பிதற்றலுக்கு
‘மடியாது(முடியாது)…. ‘ பழகுதமிழில்
கொஞ்சுவதில்லை!
உன் நினைவுகளை மட்டுமே
சுமந்து வந்துகொண்டிருக்கும்
நீயில்லா வெற்று இருக்கையை
ஒரு பேருந்து பயணத்தில்
என்னுடன் எடுத்துபோகிறேன்
“உன் நினைவுகளை மட்டுமே
சுமந்து வந்துகொண்டிருக்கும்
நீயில்லா வெற்று இருக்கையை
ஒரு பேருந்து பயணத்தில்
என்னுடன் எடுத்துபோகிறேன்”
nice
nandri
//உன் நினைவுகளை மட்டுமே
சுமந்து வந்துகொண்டிருக்கும்
நீயில்லா வெற்று இருக்கையை
ஒரு பேருந்து பயணத்தில்
என்னுடன் எடுத்துபோகிறேன்//
அருமை. ரசித்துப் படித்தேன்
மிகவும் நன்றாக இருக்க்கிறது நண்பரே.
//அருமை. ரசித்துப் படித்தேன்
Nandri ravisankar
//மிகவும் நன்றாக இருக்க்கிறது நண்பரே.
nandri thozare-:)
class- a irrukku … keep writing…