தடங்கள்

இறுதி சில நொடிகளில் ஆகஸ்ட் 21, 2007

கோப்பு வகை: bashakavithaigal — bashakavithaigal @ 7:32 மு.பகல்

இது
தகப்பனின்,தம்பியின்
கணவனின்,காலச்சுவட்டில்
தன்னை தேய்த்தெடுத்த
கிழவனின் சாவு படுக்கை!

கண்ணோரம் கடிக்கும் எறும்பு
செயல்படா கைகள்
காப்பிகோப்பையுடன் கண்ணீர் மனைவி
உள்ளுக்கும் வெளிக்குமாய் சத்ததுடன்
ஊசலாடும் உயிர்….

அலையலையாய் வந்துபோகும்
அம்மா முகம்
அருகே வாடா என்றழைக்கும்
அப்பா கரம்
காதில் ஒலிக்கும்
எட்டு வயதில் வளர்த்த
சண்டை சேவல் கூவல்
பிறந்துகொண்டிருக்கிறேனா….
இறந்துகொண்டிருக்கிறேனா…
எதுவென்று தெரியாத
ஒரு நிசப்தத்தில்
ஆட்டோவிற்கும் ஆம்புலன்சிற்கும்
வாடகை வித்தியாசம்
விசாரித்துகொண்டிருக்கும் மகன்
ஆயாசமாய் கண்களை மூடி
அடிக்குரலில் கேட்கின்றேன்
‘இறைவா எனது பயணம் தொடங்கட்டும் ‘

 

ஏன் ஆகஸ்ட் 21, 2007

கோப்பு வகை: bashakavithaigal — bashakavithaigal @ 7:31 மு.பகல்

அக்கினிவலத்தில் ஆயிரம் வாக்குறுதிகள்
உதிர்த்த உன் வாக்குறுதியை
உருக்குலைத்ததோ தீ!
உன் வீட்டு மேசை நாற்காலியோடு
நானுமொரு ஜடமாய்த்தானே
உனக்கு தெரிகிறேன்
இன்ப துன்பத்தில் பங்களிப்பு
உண்டென்று ஏன் அன்று சொன்னாய் ?
இனி
வரும்காலத்தில் உன் முககுறிப்பு உணர்ந்து
என் தேவைகள் கேட்பேன்
தலைகோதி இதழ் பிரித்து
சிறு இடை நீ தொட
சிலிர்ப்பேன்!
எவரிடமேனும் என் கேள்விக்கு
விடை உள்ளதா ?
‘இருபத்தொரு வயதிலேயே
எனக்கு ஏன் மரணம் வந்து விட்டது ? ‘